தினமும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி முடியை உலர வைப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். ஆனால் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவதால் முடி ஆரோக்கியத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் ஹேர் ட்ரையரை தலைமுடிக்கு அடிக்கடி பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்க விளைவுகளைக் காணலாம்
உச்சந்தலையில் எரிச்சல்
தலைக்கு சூடான காற்று நேரடியாக வீசுவதால் பொடுகு, அரிப்பு மற்றும் வறட்சி ஏற்படலாம். எனவே உச்சந்தலை பாதுகாப்புக்கு ஹேர் ட்ரையரைப் பாதுகாப்பான தூரத்தில் வைத்திருப்பது நல்லது
வெப்ப சேதம்
ஹேர் ட்ரையரின் பயன்பாட்டால் முடி வெப்பத்திற்கு தொடர்ந்து வெளிப்படுவது, முடியின் புரத அமைப்பை உடைத்து முடி மெலிவது மற்றும் முடி பிளவுபடுபவதற்கு வழிவகுக்கலாம். குறைந்த வெப்ப அமைப்புகள் மற்றும் வெப்ப பாதுகாப்புகளின் மூலம் இந்த சேதத்தைக் குறைக்கலாம்
பளபளப்பு இழப்பு
அதிக வெப்பத்தின் காரணமாக முடியின் மேற்புறம் சேதமடைவதுடன், முடி மந்தமாக மற்றும் உயிரற்றதாக மாறலாம். இதற்கு குளிர்ந்த காற்று அமைப்பைப் பயன்படுத்துவது அல்லது லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்துவது பளபளப்பை மீட்டெடுக்க உதவுகிறது
முடி வறட்சி மற்றும் முடி உதிர்தல்
ஹேர் ட்ரையரிலிருந்து வெளியேறும் அதிக வெப்பத்தால் தலைமுடியிலிருந்து ஈரப்பதம் அகற்றப்பட்டு, முடி வறட்சியடைந்து உடையக்கூடியதாக மாற்றலாம். மேலும் இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம். இது காலப்போக்கில் முடி இழைகளை பலவீனப்படுத்தக்கூடும்
ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது, குறைந்த வெப்ப அமைப்புகளுக்கு மாற்றுவது அல்லது காற்று உலர்த்து அமைப்புகளுக்கு மாறுவது போன்றவற்றின் மூலம் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம்