முடி செழிப்பாக வளர சூப்பர் ஃபுட் இங்கே.!

By Ishvarya Gurumurthy G
14 Jan 2024, 00:41 IST

முடி வளர பல முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது, இந்த உணவுகளை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். நல்ல முடிவு கிடைக்கும்.

கொழுப்பு மீன்

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கிறது. இதனால் முடி ஆரோக்கியமாக வளரும்.

கீரை

கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது முடியின் வேர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

அவகேடோ

இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டை

முட்டையில் பயோட்டின், புரதம் போன்றவை நிறைந்துள்ளன. இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு

இதில் பீட்டா கரோட்டின்கள் அதிகமாக உள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ-ஆக மாறும் போது, முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.