உங்க முடியை சேதப்படுத்தும் இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க

By Gowthami Subramani
07 Feb 2025, 18:38 IST

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில தவறுகள் முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதில் முடியை சேதப்படுத்தக்கூடிய நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைக் காணலாம்

ஈரமான முடியை சீவுவது

ஈரமான முடி உடையக்கூடியதாக இருக்கலாம். இந்நிலையில் சிறிய பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துவது முடி உடைதலுக்கு வழிவகுக்கும். எனவே எப்போதும் அகன்ற பல் சீப்பைப் பயன்படுத்த வேண்டும்

அதிகம் தலைமுடியை கழுவுவது

அடிக்கடி தலைமுடியைக் கழுவும் போது, முடியில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு வறட்சி மற்றும் உடையக்கூடிய தன்மையை ஏற்படுத்துகிறது

எண்ணெய் மசாஜ்களைத் தவிர்ப்பது

முடிக்கு வழக்கமாக எண்ணெய் தடவுவதன் மூலம் உச்சந்தலையை ஊட்டமளிக்கவும், முடியை வலுப்படுத்தவும் முடியும். ஆனால், இதைத் தவிர்ப்பது வறட்சியான முடி மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம்

இறுக்கமான சிகை அலங்காரங்கள்

முடியைத் தொடர்ந்து இறுக்கமாகக் கட்டுவது முடியின் வேர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, முடி உதிர்தல் அதிகளவு ஏற்படலாம்

அதிக வெப்பத்தைப் பயன்படுத்துதல்

கர்லிங் அயர்ன்கள், ஸ்ட்ரைட்டனர்கள் மற்றும் ப்ளோ ட்ரையர்களை அடிக்கடி பயன்படுத்துவதால் முடி இழைகள் பலவீனமடைகிறது. இது காலப்போக்கில் சேதத்தை ஏற்படுத்தலாம்

ஆரோக்கியமான உணவைப் புறக்கணிப்பது

இரும்பு, புரதம் மற்றும் பயோட்டின் போன்ற ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடி ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது. ஆனால் இது போன்ற உணவுகளைத் தவிர்ப்பது மந்தமான மற்றும் உடையக்கூடிய முடிக்கு வழிவகுக்கிறது

இந்த பொதுவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் வலுவான, ஆரோக்கியமான முடியை பராமரிக்கலாம். அதே சமயம், முடி பராமரிப்பு வழக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் உச்சந்தலையை வளர்க்கவும், நீண்ட கால முடி ஆரோக்கியத்திற்கும் சிறிய மாற்றங்களைச் செய்யலாம்