முடி வேகமாக வளர வேண்டுமா? இதை செய்யுங்க!

By Karthick M
04 May 2024, 19:31 IST

நீளமாக முடி வளர வேண்டும் என்பது பெண்களின் குறிக்கோளாக இருக்கும். அதேபோல் முடி வலுவாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாகும். இதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்.

ஹேர் மாஸ்க் அப்ளை

ஆரோக்கியமான முடிக்கு நெல்லிக்காய், கற்றாழை, தயிர் மற்றும் சீகைக்காய், முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை முடிக்கு பயன்படுத்தலாம்.

உணவில் கவனம் தேவை

விரைவான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளலாம்.

ஹெட் மசாஜ்

மன அழுத்தத்தை குறைக்கவும் முடி வேர்கள் மற்றும் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கவும் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

முடியை ட்ரிம் செய்வது அவசியம்

உங்கள் தலைமுடியை தொடர்ந்து ட்ரிம் செய்வதும் முக்கியம். அதாவது முடியின் நுனியில் உள்ள சேதமடைந்த முடிகளை அகற்றுவது அவசியம். இது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மன அழுத்தம் குறையும்

பெரும்பாலானோர் மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். இதனால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. விரைவான முடி வளர்ச்சிக்கு மன அழுத்தம் குறைய வேண்டும். இவை அனைத்தும் முடி வளர்ச்சிக்கு மிக அவசியம்.