தலை முடிக்கு முட்டையை இப்படி யூஸ் பண்ணா முழு பலன் கிடைக்கும்!

By Karthick M
21 Jun 2025, 21:29 IST

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியிழப்பைத் தவிர்க்கவும் முட்டை பெரிதும் உதவுகிறது. இதில் முடிக்கு முட்டை பயன்படுத்தும் சில முறைகளைக் காணலாம்.

முட்டைகள் பொதுவாக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்திருப்பதால், முடி வளர்ச்சியின் வேகத்தை மேம்படுத்த உதவுகிறது.

முட்டைகள் - இரண்டு, மருதாணி - 3 டீஸ்பூன், பால் - 2 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் எடுத்து 3 டீஸ்பூன் மருதாணி சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகள் மற்றும் 2 தேக்கரண்டி பால் சேர்க்கவும்.

இந்த கலவையை 30 நிமிடங்கள் தடவி, பிறகு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் துவைக்கலாம்.