முடியை வேகமாக வளரச் செய்யும் எண்ணெய் வகைகள்!

By Karthick M
14 Apr 2024, 14:47 IST

முடி உதிர்வு பிரச்சனை

மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. உங்கள் தலைமுடியை வலுப்படுத்த விரும்பினால் இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்கள்.

ஆம்லா எண்ணெய்

ஆம்லா எண்ணெய் முடிக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. ஆலிவ் எண்ணெயுடன் ரோஸ்மேரியை கலந்து தலைமுடியில் தடவலாம்.

தேங்காய் எண்ணெய்

கூந்தலை வலுப்படுத்த தேங்காய் எண்ணெய் மூலம் முடியை மசாஜ் செய்யலாம். இது முடியை பலப்படுத்துகிறது.

ஆமணக்கு மற்றும் ஆலிவ் எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இது முடியை வலுவாக்க உதவுகிறது. இதை தலைமுடியில் தடவினால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இவை அனைத்தும் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க உதவும் என்றாலும் பிரச்சனை தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகவும்.