நரைமுடியை கருப்பாக்க... துளசியை இப்படி பயன்படுத்துங்க!

By Kanimozhi Pannerselvam
24 Jan 2024, 08:03 IST

நரைமுடி

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஆயுர்வேத நிபுணர்களின் பரிந்துரைப்படி துளசி இலைகளால் செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தலாம்.

துளசி

துளசி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் விளைவு வெள்ளை முடியை கருமையாக்க முடியும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

துளசி ஹேர் பேக்

நரை முடியைப் போக்க துளசி ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம். இதைச் செய்ய, துளசி மற்றும் தயிர் என வீட்டில் கிடைக்கக்கூடிய இரண்டு சிம்பிள் பொருட்கள் மட்டுமே தேவை.

செய்முறை

முதலில் ஒரு கப் துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தயிர்

துளசி இலைகளை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அப்ளே செய்வது எப்படி?

இதனை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் சாதாரண ஷாம்பு கொண்டு முடியை கழுவவும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இது உங்கள் நரைமுடியை கருப்பாக மாற்றும்.