தினமும் கொய்யா இலை கொதிக்கவைத்த நீரை முடியில் தடவினால் என்னவாகும்?

By Kanimozhi Pannerselvam
12 Nov 2024, 10:19 IST

அழற்சி எதிர்ப்பு

கொய்யா இலை கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் தடவி வந்தால், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, உச்சந்தலையில் ஏற்படும் அழற்சி பிரச்சனைகளை குறைக்கும்.

முடிக்கு பாதுகாப்பு

இதிலுள்ள வைட்டமின் சி கொலாஜன் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் லைகோபீன் புற ஊதா கதிர்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.

பளபளப்பு

கொய்யா இலை வேகவைத்த தண்ணீரில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நம் முடியின் பொலிவையும் பளபளப்பையும் பாதுகாக்கிறது. இதனை தினமும் பயன்படுத்தினால், முடி இழந்த பொழிவை மீண்டும் பெறும்.

கூந்தல் அடர்த்தி

கொய்யா இலைகளில் உள்ள அதிக வைட்டமின் சி செறிவு நமது உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பதால், கூந்தலின் அடர்த்தியும் அதிகரிக்கிறது.

உச்சந்தலை சுத்தம்

கொய்யா இலைகளில் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் நிறைந்துள்ளன, அவை நம் உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

வேர்களுக்கு பலம்

இதிலுள்ள வைட்டமின் சி வேர்களை பலப்படுத்துகிறது, இதனால் முடி உடையும் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த இலைகள் மயிர்க்கால்களைச் சுற்றி படிந்துள்ள அழுக்கு மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கி, எண்ணெய்ப் பசையில் இருந்து பாதுகாக்கிறது.