தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதன் மூலம் முடிக்கு ஊட்டமளித்து அதை வலுப்படுத்தலாம் என்று அறியப்படுகிறது. ஆனால், முடிக்கு அதிகளவு எண்ணெய் தடவுவது பல முடி மற்றும் உச்சந்தலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்
அதிக அழுக்கு மற்றும் தூசி
அதிக எண்ணெய் தடவுவது முடி சுற்றுச்சூழலில் இருந்து அதிக அழுக்கு, தூசி மற்றும் மாசுபாட்டை ஈர்க்கிறது. இந்த படிவு காரணமாக உச்சந்தலையில் அழுக்கு ஏற்படுவதுடன் பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்
கழுவுவது கடினம்
முடிக்கு அதிகப்படியான எண்ணெயைத் தடவுவதால், தலைமுடியை சரியாக சுத்தம் செய்வது கடினமான ஒன்றாக அமைகிறது. ஏனெனில், அதிகப்படியான எண்ணெயை அகற்ற பல முறை கழுவ வேண்டியிருக்கும். இது உச்ஸ்ந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சியை ஏற்படுத்தலாம்
உச்சந்தலை துளை அடைப்பு
அதிகளவு எண்ணெய் வைப்பது உச்சந்தலையில் உள்ள துளைகளை அடைத்து, சுவாசிப்பதைத் தடுக்கிறது. இது உச்சந்தலையில் பொடுகு, கொப்புளம், அரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்
தொற்று பாதிப்புகள்
எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை சூடான மற்றும் ஈரப்பதமான சூழலை உருவாக்குகிறது. இது பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் துர்நாற்றம் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது
தளர்வான முடி
அதிகப்படியான எண்ணெயை முடிக்கு பயன்படுத்துவதால், தலைமுடியை கனமாகவும், தட்டையாகவும், க்ரீஸாகவும் மாற்றுகிறது. இது முடியின் இயற்கையான பளபளப்பைக் குறைத்து, அதை தளர்வாக மற்றும் மந்தமாக வைக்கிறது