ஷாம்புக்கு பதிலாக இந்த 5 இயற்கை பொருட்களை பயன்படுத்துங்க!
By Kanimozhi Pannerselvam
20 Feb 2024, 09:52 IST
ஷாம்பு
பெரும்பாலானோர் தலைமுடியில் உள்ள அழுக்குகளை அகற்ற ஷாம்பு பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஷாம்பூவை அதிகமாகப் பயன்படுத்துவதால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இயற்கையாகவே ஷாம்பூவின் அதே நன்மைகளை வழங்கும் பொருட்களை பயன்படுத்தலாம்.
நெல்லிகாய்
நெல்லிக்காயில் முடி ஆரோக்கியத்திற்கு உதவும் பல சத்துக்கள் உள்ளன. எனவே நெல்லிக்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவவும். இது ஷாம்பூவின் அதே விளைவைக் கொடுக்கும். கூந்தலுக்கும் நல்லது.
செம்பருத்தி மற்றும் அதன் இலைக ஈரப்பதத்தை இழக்காமல் பாதுகாக்க உதவும் ஒரு தாவரமாகும். இதன் பொடி மற்றும் இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் ஷாம்பு பயன்படுத்திய பலன் கிடைக்கும்.
பூந்தி கொட்டை
சோப் நட் என அழைக்கப்படும் பூந்தி கொட்டையை தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து தலையில் தடவி குளிக்கலாம். இதனால் பொடுகு தொல்லை நீங்கும், தலைமுடி பட்டு போல் பளபளப்பாகும்.
கடலை மாவு + வெந்தயம்
வெந்தயத்தை முந்தைய நாள் நன்கு ஊறவைத்து சிறிது தண்ணீரில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கடலை பொடியுடன் கலந்து தலையில் தடவலாம். இதுவும் தலையை நன்கு சுத்தம் செய்யும்.