முடி அதிகமா உதிருதா? அதுக்கு இது தான் காரணம்

By Gowthami Subramani
26 Jul 2024, 17:30 IST

முடி உதிர்வு

இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு ஆகும். இதில் முடி உதிர்வு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து காணலாம்

ஊட்டச்சத்து குறைபாடுகள்

முடி ஆரோக்கியத்திற்கு பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்

கணிசமான எடையிழப்பு

விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க உடல் எடையிழப்பு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இது பெரும்பாலும் திடீர் உணவு மாற்றங்களின் போது உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆகும். எடையிழப்பினால் ஏற்படும் முடி உதிர்வு பொதுவாக தற்காலிகமானதாகும்

பிரசவத்திற்குப் பிறகு

கர்ப்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜனின் உயர்ந்த அளவு முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனினும், பிரசவத்திற்குப் பிறகு, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், முடி இறுதியில் உதிரும் சூழல் உண்டாகும்

மருத்துவ நிலைமைகள்

பல்வேறு மருத்துவ நிலைமைகளின் காரணமாக முடி உதிர்வு உண்டாகலாம். அதன் படி, அலோபீசியா அரேட்டா போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. இதில் உச்சந்தலையில் தொற்றுகள், தடிப்புத் தோல் அழற்சி போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தலாம்

மரபணு கோளாறுகள்

முடி உதிர்தலுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக மரபணு கோளாறுகளும் அடங்கும். இது முடியைக் குறைத்து வழுக்கை புள்ளிகளை ஏற்படுத்தலாம்

ஹார்மோன் மாற்றங்கள்

தைராய்டு, மாதவிடாய் நிறுத்தம், கர்ப்பம், பிரசவம் போன்ற நிலைமைகளில் நிரந்தர அல்லது தற்காலிக முடி உதிர்தல் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே முடி உதிர்வுக்குக் காரணமாகும்

மன அழுத்தம்

உளவியல் மற்றும் உடல் ரீதியான மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்களுக்குக் காரணமாகிறது. இது முடி உதிர்தல் நிலைமைகளைத் தூண்டுகிறது. அதீத மன அழுத்தம் முடி உதிர்தலை அதிகரிக்கிறது