நரைத்த முடியை வேரிலிருந்து கருமையாக்க... இதை காபி பொடியுடன் கலக்குங்க!
By Kanimozhi Pannerselvam
10 Oct 2024, 13:30 IST
வால்நட்ஸ்
வால்நட் ஓடுகளில் ஜுக்லோன் எனப்படும் இயற்கை சாயம் உள்ளது. வால்நட் ஓடுகளை நசுக்கி தண்ணீரில் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இத்துடன் காபி கலந்து தலைமுடியில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து நன்கு அலசவும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இதை முழுமையாக முடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் அப்படியே விடவும். இதற்குப் பிறகு, முடியை சுத்தம் செய்யவும். வாரம் இருமுறை பயன்படுத்துவது நல்லது.
காபி மற்றும் கற்றாழை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதற்கு இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் காபி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். தலைமுடியில் 30 நிமிடங்கள் வைத்த பிறகு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியைக் கழுவவும். வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினாலே நரைமுடியில் வித்தியாசத்தைக் காணலாம்.
தண்ணீர்
காபியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது உங்கள் தலைமுடியை ஷாம்பூவுடன் கழுவவும். அதன் பிறகு, காபியை தலையில் ஊற்றி நன்கு மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, தலைமுடியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும். நல்ல ரிசல்ட்டிற்கு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
மருதாணி
மருதாணி பவுடருடன் கொதிக்கவைத்து ஆற வைத்த காபியை கலக்கவும். கலவையை உங்கள் தலைமுடியில் தடவி, ஷவர் கேப்பால் மூடி வைக்கவும். அதனை 1-2 மணி நேரத்திற்கு பிறகு லேசான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.