முடி தாறுமாறா வளர வெங்காய சாற்றுடன் இவற்றை கலந்து தடவுங்க!

By Devaki Jeganathan
06 Apr 2025, 21:18 IST

வெங்காய சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளது. இவை நீளமான மற்றும் கருமையான கூந்தலை பெற உதவும். அடர்த்தியான கூர்ந்தலை பெற வெங்காய சாற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என காணலாம்.

தேங்காய் எண்ணெய்

சிறிய வெங்காயத்தை இடித்து அதன் சாற்றை தனியாக எடுக்கவும். அந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய், மற்றும் சிறிது டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை

1 முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து 1 ஸ்பூன் வெங்காய சாறு சேர்த்து கலக்கவும். பின், அதில் 3 துளி ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கலந்து முடிக்கு தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும். இது, உச்சந்தலை வறட்சியை சரி செய்யும்.

எலுமிச்சை சாறு

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 ஸ்பூன் வெங்காய சாறு சேர்த்து கலந்து, அதை தலையில் தேய்த்து 30 நிமிடம் மசாஜ் செய்யவும். பின், வெதுவெதுப்பான நீர் கொண்டு தலைக்கு குளித்து வர முடி அடர்த்தியாக வளரும்.

விளக்கெண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் மற்றும் வெங்காய சாற்றை சம அளவில் எடுத்து கலந்து, தலை முடியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின், சீகைக்காய் வைத்து தலைக்கு குளித்து வந்தால், முடி கருமையாகவும், நீளமாகவும் வளரும்.

ஆலிவ் ஆயில்

இரண்டு ஸ்பூன் வெங்காய சாற்றுடன் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு சாறு

1 ஸ்பூன் பூண்டு சாறுடன் 1 ஸ்பூன் வெங்காய சாறு (ம) 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை, தலைக்கு குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்தால், முடி உதிர்வு குறையும்.