முடி வேகமா வளர தினமும் இத மட்டும் செய்யுங்க

By Gowthami Subramani
27 Aug 2024, 09:01 IST

முடி ஆரோக்கியம் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வாழ்க்கைமுறையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்

ஆரோக்கியமான உணவு

முடி உதிர்வதைத் தடுக்க வைட்டமின் சி மற்றும் டி, இரும்பு, துத்தநாகம், பயோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் படி, திராட்சை, வெள்ளரி, மாம்பழம் போன்ற பருவகால பழங்கள், காய்கறிகள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நீரேற்றமாக இருப்பது

உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வது அவசியம். ஏனெனில் நீரிழப்பு காரணமாக முடி உதிர்வு மற்றும் முடி உடையக்கூடியதாகவும் உலர்ந்ததாகவும் மாறுகிறது

முடி அலசுதல்

உதிர்ந்த மற்றும் வியர்வையின் காரணமாக உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் சேதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சரியான முடி கழுவும் வழக்கத்தை பராமரிக்க வேண்டும்

வெப்ப ஸ்டைலிங் குறைப்பது

ஹீட் ஸ்டைலிங் செய்வது முடி உதிர்வு மற்றும் மெலிதாக வழிவகுக்கும். ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்தி தலைமுடியை நேராக்குவது அல்லது சுருட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல, தலைமுடியை உலர்த்த ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

புகைபித்தல், மது அருந்துதலைத் தவிர்ப்பது

அதிகளவிலான புகைபிடித்தல், மதுபானங்கள் அருந்துவது முடி உதிர்தலை ஏற்படுத்துவதுடன் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது

மன அழுத்தத்தைக் குறைப்பது

மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்