கூந்தலுக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துவது நல்லதா?

By Kanimozhi Pannerselvam
28 Feb 2024, 09:35 IST

எலுமிச்சை சாற்றை கூந்தலுக்கு பயன்படுத்துவது முற்றிலும் விளைவுகளை ஏற்படுத்தாது எனக்கூற முடியாது. இது சிலருக்கு தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.

எலுமிச்சை சாற்றை பயன்படுத்துவதால் உச்சந்தலை வறட்சி ஏற்படலாம்.

வறண்ட கூந்தல் உள்ளவர்கள் அதில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. இல்லையெல் சிலருக்கு அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வெயிலில் செல்லும் போது. அதாவது எலுமிச்சம் பழச்சாற்றை தலைமுடியில் தேய்த்து சூரிய ஒளி படும் போது முடியின் நிறம் அதன் கருமையை இழக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சை சாற்றை கூந்தலில் தடவும் முன்பு, புருவத்தில் பேட்ச் டெஸ்டர் அல்லது உடலில் கை, கால்களில் உள்ள முடி மீது பரிசோதித்து, விளைவுகள் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தவும்.