கரிம இரசாயனமான கற்பூரம், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. மெழுகு போன்ற அமைப்பைக் கொண்டுள்ள கற்பூரம் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் தலைமுடிக்கு கற்பூரம் தரும் நன்மைகளைக் காணலாம்
பொடுகு நீங்க
கற்பூரம் சக்திவாய்ந்த பொடுகு எதிர்ப்பு தீர்வாக அமைகிறது. இதன் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கிறது
அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்க
கற்பூரம் இயற்கையான வலி நிவாரணியாக இருப்பதால் உச்சந்தலையில் தொற்றுக்களால் ஏற்படும் அரிப்பு மற்றும் சரும எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. இவை உச்சந்தலையில் அதிக வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது
பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க
திறந்த காயம் அல்லது மயிர்க்கால்கள் போன்றவற்றால் உச்சந்தலையில் பாக்டீரியாக்கள் நுழையலாம். முடிக்கு கற்பூரத்தை பயன்படுத்துவது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது
பேன்கள் நீங்க
தலையில் உள்ள பேன்களை நீக்க கற்பூரம் உதவுகிறது. இதில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூர எண்ணெய் அல்லது கற்பூர பொடி சேர்த்து பயன்படுத்தலாம்
முடி அமைப்பை மேம்படுத்த
கற்பூரம் நல்ல ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. முடியில் கற்பூரத்தைப் பயன்படுத்தும் போது முனை பிளவுகள், முடி வறட்சி மற்றும் முடி உடைதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்
முடி உதிர்வைத் தடுக்க
இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், பூஞ்சை காளான் பண்புகள் போன்றவை முடியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முடி உதிர்வைத் தடுக்கவும், வழுக்கைத் தடுக்கவும் உதவுகிறது