முடி ஆரோக்கியத்திற்கு வெட்டி வேர் எண்ணெய் சிறந்த தேர்வாகும். வெட்டிவேர் ஆனது ஒரு பசுமையான புல் வகையைச் சார்ந்ததாகும். இந்த நறுமண வேரிலிருந்து தயார் செய்யப்படும் வெட்டிவேர் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் முடி ஆரோக்கியத்தில் வெட்டிவேர் எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்
முடி வளர்ச்சியை அதிகரிக்க
வெட்டிவேர் எண்ணெயில் நிறைந்துள்ள மூலிகைகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியைப் பெறலாம்
முடி வேர்களை பலப்படுத்த
முடி வேர்களை வலுப்படுத்தவும், முடி உடைவதைத் தடுக்கவும் வெட்டிவேர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள புரோலின், டைரோசின் போன்ற அமினோ அமிலங்கள் முடி தண்டுக்கு வலுவூட்டவும், முடி உடைவதைக் காப்பாற்றவும் உதவுகிறது
பொடுகை நீக்குவதற்கு
வெட்டிவேர் எண்ணெயில் உள்ள இயற்கையான பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் பொடுகைக் குறைக்கவும், உச்சந்தலையில் ஈஸ்ட் வளர்ச்சியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது அரிப்பு, உரித்தல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது
முடி உதிர்வைத் தடுக்க
வெட்டிவேர் எண்ணெயில் மூலிகை அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இது முடி உதிர்தலுக்கு பங்களிக்கும் உச்சந்தலையில் தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள், முடி நுண்குழாய்களை இறுக்கி, முடி உதிர்தலைத் தடுக்கிறது
முடி வறட்சியைப் போக்க
வெட்டிவேர் எண்ணெயில் உள்ள இயற்கையான கண்டிஷனிங் பண்புகள் தலைமுடியை ஈரப்பதமாக்கி வளர்க்க உதவுகிறது. இதில் உள்ள இயற்கையான மென்மையாக்கும் பொருட்கள் உச்சந்தலையை ஆற்றவும் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. மேலும் இது வறட்சியைக் குறைக்கிறது