நாம் பலரும் ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்திருப்போம். ஏனெனில், இவை சருமத்தில் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால், இதை முடிக்கும் பயன்படுத்தலாம். முடிக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது
தலைமுடிக்கு ரோஸ்வாட்டர்
ரோஸ் வாட்டரை கூந்தலுக்குத் தடவுவது முடியில் எண்ணெய் பசையை நீக்கி இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும், இது வியர்வை வாசனையிலிருந்து விடுவிக்க உதவுகிறது
எப்படி பயன்படுத்தலாம்
ரோஸ்வாட்டரை சில பொருள்களுடன் சேர்த்து தலைமுடிக்கு பயன்படுத்துவது கூடுதல் நன்மையைத் தருகிறது
நேரடியாக பயன்படுத்துதல்
ரோஸ் வாட்டரை நேரடியாக பயன்படுத்துவது முடிக்கு ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை அளிக்கிறது. இதன் மூலம் வறட்சியைக் குறைக்கிறது
எலுமிச்சை
முடியில் உள்ள கூடுதல் எண்ணெயை நீக்க எலுமிச்சையை எடுத்துக் கொள்ளலாம். ரோஸ் வாட்டருடன் எலுமிச்சையை சேர்த்து தலைமுடியில் தடவ, பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெறலாம்
தேன்
தேனில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளது. உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க மற்றும் ஆரோக்கியத்திற்காக ரோஸ் வாட்டரில் தேன் கலந்து பயன்படுத்தலாம்
கற்றாழை ஜெல்
ரோஸ் வாட்டரில் கற்றாழை ஜெல்லை கலந்து தலைமுடியில் தடவலாம். இவ்வாறு தடவுவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்கிறது
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இதை ரோஸ் வாட்டரில் கலந்து தடவினால், உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும்
எத்தனை முறை
ரோஸ் வாட்டரை இந்த வழிகளில் தலைமுடிக்கு வாரம் இருமுறை பயன்படுத்தலாம். இவை தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது