ரோஸ் வாட்டரை முடிக்கு பயன்படுத்தலாமா?

By Gowthami Subramani
21 Oct 2024, 19:15 IST

ரோஸ் வாட்டர் முடி வளர்ச்சி, தடிமனுக்கு உதவுகிறது. குறிப்பாக, இது உச்சந்தலையை ஊட்டமளிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கிறது

உச்சந்தலைக்கு ஊட்டமளிக்க

ரோஜா இதழ்களில் வைட்டமின்கள் ஏ, பி3, சி மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இவை உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதுடன், மயிர்க்கால்களைத் தூண்டுகிறது

நீரேற்றத்திற்கு

ரோஸ் வாட்டர் உச்சந்தலையில் நீரேற்றத்தைத் தருவதுடன் ஆற்ற உதவுகிறது. இது முடி வலுவாகவும், மீள்தன்மையுடனும் வளர உதவுகிறது

உச்சந்தலை பிரச்சனைக்கு

ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற உச்சந்தலை பிரச்சனைகளுக்கு உதவுகிறது

பொடுகைக் குறைக்க

ரோஸ் வாட்டர் ஒரு லேசான அஸ்ட்ரிஜென்ட் ஆகும். இது பொடுகு மற்றும் எண்ணெயைக் குறைக்க உதவுகிறது

பிரகாசத்தை சேர்க்க

சுருள் முடி பிரச்சனைக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது சுருள் முடியை அமைதிப்படுத்தி, பளபளப்பைச் சேர்க்கிறது

எப்படி பயன்படுத்தலாம்?

ரோஸ் வாட்டரைத் தலைமுடிக்குப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்

ரோஸ்வாட்டர் ஷாம்பு

வீட்டிலேயே இயற்கையான முறையில் ரோஸ் வாட்டரைக் கொண்டு ஷாம்பூ தயாரிக்கலாம். இது முடிக்கு ஊட்டமளித்து, உச்சந்தலையை சுத்தம் செய்கிறது

ரோஸ்வாட்டர் க்ளீன்சர்

கூந்தலுக்கு ரோஸ் வாட்டரை சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம். ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ரோஸ் வாட்டரைச் சேர்த்துக் கலக்கலாம். ஷாம்பு பயன்படுத்திய பின் இதைப் பயன்படுத்தி தலையை அலசலாம்