மாம்பழம் மட்டுமல்லாமல் மா இலைகளும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அந்த வகையில் பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு மா இலைகள் ஒரே தீர்வாக அமைகிறது. இதில் கூந்தலுக்கு மா இலை தரும் நன்மைகளைக் காணலாம்
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க
மாம்பழ இலைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்ஸிட்னட்டுகள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது
உச்சந்தலையில் ஊட்டச்சத்துக்களை வழங்க
முடி வளர்ச்சிக்கு உச்சந்தலை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இதில் உள்ள மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் போன்றவை உச்சந்தலை ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது
கூந்தலுக்கு பளபளப்பைத் தர
மா இலைகளில் உள்ள ஃபிளவனாய்டுகள் கூந்தலுக்கு பிரகாசத்தை அளிக்கிறது. இது முடியை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது
நரைமுடி தவிர்க்க
மா இலைகளில் பொட்டாசியம் மற்றும் ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது முடியின் இயற்கை நிறத்தை பராமரித்து, முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கிறது
மா இலை பயன்படுத்தும் முறை
10 - 15 மா இலைகளை கலவையாக்கி தலைமுடியில் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் தலைமுடிக்கு அப்படியே வைத்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்
முன்னெச்சரிக்கை
மா இலைகள் தலைமுடிக்கு பல வழிகளில் மிகவும் நன்மை பயக்கும். எனினும் உச்சந்தலையில் எதையும் பயன்படுத்தும் முன்பாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது