பலரும் தலைக்கு குளித்த உடன் ஈரமான முடியுடன் தூங்குவதை விரும்புவர். உண்மையில் தலைக்கு குளித்த உடனேயே சரியாக உலர்த்த வேண்டும். இவ்வாறு உலர வைக்காமல் ஈர முடியுடன் தூங்குவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்
முடி சேதம்
ஈரமான முடியுடன் தூங்குவது முடியை சேதப்படுத்தலாம். ஏனெனில், முடி ஈரப்பதமாக இருக்கும் போது அது மிகவும் மென்மையாகவும், விரைவில் உடையக்கூடியதாகவும் இருக்கலாம்
தலைவலி
தலைமுடியை உலர்த்தாமல் ஈரமான முடியுடன் தூங்குவது தலைவலியை உண்டாக்கலாம்
அலர்ஜி பிரச்சனை
சிலருக்கு ஈரமான கூந்தல் அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது இரவு தூங்கும் போது பிரச்சனையை ஏற்படுத்துகிறது
தொற்று உருவாகுதல்
ஈரமான கூந்தலுடன் உறங்குவதன் காரணமாக, உச்சந்தலையில் பூஞ்சை தொற்று அபாயம் ஏற்பட வழிவகுக்கும். இது பெரும்பாலும் முடியின் கீழ் ஈரப்பதத்தால் ஏற்படுகிறது
வழுக்கை
நீண்ட நேரம் ஈரமான முடியுடன் தூங்குவது வழுக்கை பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஏனெனில், ஈரமான முடி மென்மையாக இருப்பதால் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்
குறிப்பு
இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க ஈரமான முடியுடன் தூங்குவதைத் தவிர்த்து, முடியை உலரவைக்க வேண்டும்