இரவில் முடியை சீப்பால் சீவுவது சரியா? தவறா?

By Karthick M
16 Feb 2024, 00:28 IST

இரவில் தலைமுடி சீவலாமா?

பெரும்பாலும் தூங்கும் முன் இரவில் சீப்பால் தலையை சீவிவிட்டு தூங்கச் செல்வார்கள். இது சரியா, தவறா என்பது குறித்து பார்க்கலாம்.

வேதம் சொல்லும் உண்மை

ஜோதிட சாஸ்திரப்படி, பெண்கள் இரவில் தூங்கும் முன் முடியை வாரவேக் கூடாது. சூரியன் மறைந்த பிறகு எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த சக்திகள் பெண்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அறிவியல் கருத்து

விஞ்ஞானம் ரீதியில் நாம் கவனம் செலுத்தினால், இரவில் வாரிவிட்டு தூங்குவது முடிக்கு நன்மை பயக்கும். இதனால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

முடி கொட்டாது

இரவில் தூங்கும் முன் தலையை சீவினால் முடி உடைவது குறையும். இரவில் சரியாக வாரிவிட்டு தூங்குவது முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இரத்த ஓட்டம் மேம்படும்

இரவில் தூங்கும் முன் முடியை சீவினால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது உங்கள் முடியின் வேர்களை பலப்படுத்துவதோடு நல்ல ஊட்டசத்தையும் வழங்குகிறது.

பளபளப்பான முடி

இரவில் தூங்கும் முன் தலைமுடியை சீவினால் அது மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தற்காப்பு நடவடிக்கைகள்

உங்கள் தலைமுடிக்கு மரத்தாலான சீப்பை பயன்படுத்துவது நல்லது. இது முடிக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் முடி அதிகம் உடையாமல் இருக்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இரவில் சீவுவதால் பல நன்மைகள் கிடைக்கும் அதேவேளையில் சில தீமைகளும் இருக்கும். அடிக்கடி முடியை சீவக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்