மழைக்காலத்தில் தலை முடி ஆரோக்கியமாக இருக்க வெங்காய சாறு தடவுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பண்புகள் தலைமுடியின் உச்சந்தலையில் உள்ள தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்து காணப்படுகிறது. இவை முடியின் மயிர்க்கால்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
வெங்காய சாற்றை உச்சந்தலையில் தடவுவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைப் பெறுவதை உறுதி செய்கிறது.
வெங்காயச் சாற்றில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உச்சந்தலையைத் தணித்து, எரிச்சல் அல்லது முடி வளர்ச்சியைத் தடுக்கும் அழற்சியைக் குறைக்கிறது.
உச்சந்தலையில் ஏற்படும் தொற்று மற்றும் பொடுகை எதிர்த்துப் போராட வெங்காயம் சிறந்த தேர்வாக அமைகிறது. வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது மிக நல்லது.