முடி ஸ்ட்ராங்கா வளர கிரேக்க தயிர் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
20 Feb 2025, 17:50 IST

உடல் ஆரோக்கியத்திற்கு தயிர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆனால், தலைமுடி ஆரோக்கியத்திலும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் கூந்தலை இயற்கையாகவே பளபளப்பாக்க உதவும் கிரேக்க தயிரின் நன்மைகளைக் காணலாம்

முடி வளர்ச்சிக்கு

கிரேக்க தயிரில் வைட்டமின் பி5 மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை இரண்டுமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி5 முடியின் நுண்ணறைகளுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது

முடியை ஈரப்பதமாக்க

கிரேக்க தயிர் இயற்கையான கண்டிஷனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்பட்டு, அதன் கிரீமி அமைப்பு மற்றும் உள்ளார்ந்த கொழுப்புகள் முடி தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி முடியை ஈரப்பதமாக வைக்கிறது

முடி உதிர்தலுக்கு

கிரேக்க தயிரின் கண்டிஷனிங் செயல்பாடு முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முடி பராமரிப்பு முறையில் கிரேக்க தயிரைச் சேர்ப்பதன் மூலம் மென்மையான முடிகளைப் பெறலாம்

எரிச்சலைத் தணிக்க

கிரேக்க தயிரில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிவத்தல் மற்றும் அரிப்பை அமைதிப்படுத்துகிறது. மேலும் இது அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது எரிச்சலூட்டும் உச்சந்தலையை ஆற்றுவதன் மூலம் முடிக்கு நன்மை பயக்கும்

முடியைப் பலப்படுத்த

தலைமுடிக்கு கிரேக்க தயிரில் உள்ள பல நன்மைகளில் அதன் முடியை வலுப்படுத்தும் திறன் அமைகிறது. இதில் உள்ள புரதம் முடியின் தண்டுகளை வலுப்படுத்தி, சேதத்தை எதிர்க்கும் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் முடி உடைதலைக் குறைக்கிறது

உச்சந்தலை pH அளவை சமநிலைப்படுத்த

முடிக்கு கிரேக்க தயிரைப் பயன்படுத்துவது உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது. இதற்கு கிரேக்க தயிரில் உள்ள புரோபயாடிக்குகளே காரணமாகும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்குகிறது

குறிப்பு

தலைமுடியில் கிரேக்க தயிரைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். எனினும், இதை முடிக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். எனினும் ஏதேனும் எரிச்சல் ஏற்படால் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்