நீளமான, தடிமனான முடிக்கு உதவும் ஜின்செங்

By Gowthami Subramani
17 Oct 2024, 08:28 IST

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜின்செங் உதவுகிறது. இதில் நீளமான, தடிமனான முடிக்கு ஜின்செங் தரும் நன்மைகளைக் காணலாம்

முடி வளர்ச்சி

ஜின்ஸெங் உச்சந்தலையில் உள்ள சரும செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடி உதிர்வை ஏற்படுத்தும் அழற்சிப் பொருட்களையும் குறைக்கிறது

முடி ஆரோக்கியம்

ஜின்ஸெங் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வேர்களிலிருந்து மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கவும், வலுவான முடியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

ஜின்ஸெங் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது செல்கள் மற்றும் மயிர்க்கால்களை ஆரோக்கியமாக மாற உதவுகிறது

முடி வேர்களை வலுப்படுத்த

ஜின்ஸெங் முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இது முடி உதிர்வைக் குறைப்பதுடன், மெலிவதைத் தடுக்கிறது

பொடுகு சிகிச்சைக்கு

ஜின்ஸெங் தேநீர் பொடுகுத் தொல்லைக்கு உதவுகிறது. ஏனெனில் இது உச்சந்தலையை சுத்தம் செய்யும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது