இஞ்சி எண்ணெய் என்பது தாவரத்தின் வேரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய் ஆகும். இது முடி வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு அற்புதமான இயற்கை கண்டிஷனர் ஆகும். இதில் முடி வளர்ச்சிக்கு இஞ்சி எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்
முடி உதிர்வைக் குறைக்க
இதில் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை முடி உதிர்தலை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கிறது. இதன் மூலம் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தலாம்
முடி வளர்ச்சிக்கு
ஒரு சூடான உணர்வை பரப்புவதுடன், முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இவை சீரான ஓட்டத்தை மேம்படுத்தி அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
பொடுகு நீங்க
பொடுகு பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதில் இஞ்சி எண்ணெய் சிறந்தது. இதில் உள்ள ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது
அரிப்பு நீங்க
உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வைக் கட்டுப்படுத்த இஞ்சி எண்ணெய் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள பருக்களையும் அகற்ற உதவுகிறது
பளபளப்பான முடிக்கு
இது ஒரு இயற்கை கண்டிஷனராக இருப்பதால், இதில் கடுமையான இரசாயனங்கள் எதுவும் இல்லை. எனவே தலைமுடிக்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது
முன்கூட்டிய நரைத்தலைத் தவிர்க்க
இஞ்சி எண்ணெயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முன்கூட்டிய நரைமுடியைத் தவிர்க்கிறது. மேலும் தலைமுடியின் இயற்கையான நிறமியை அதிகரித்து பளபளப்பாக மாற்றுகிறது