முடிக்கு கற்பூரம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

By Gowthami Subramani
19 Aug 2024, 08:47 IST

முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே சில எளிய பொருள்களைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். அதன் படி, முடி பராமரிப்பு பிரச்சனைகளை சமாளிக்க கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை தரும் நன்மைகளைக் காணலாம்

முடி பளபளப்பாக

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை பசுமையான மற்றும் பளபளப்பான முடிக்கு பயனுள்ளதாக அமைகிறது. இந்தக் கலவையை வாரத்திற்கு இரண்டு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது, சிறந்த பலனைப் பெறலாம்

பொடுகை எதிர்த்துப் போராட

கற்பூரத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது பொடுகை உண்டாக்கும் பூஞ்சையைக் குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத் தூளைக் கலந்து பயன்படுத்துவது பொடுகை நீக்குவதுடன் அரிப்பு மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது

முடி உதிர்தலைக் குறைக்க

முடிக்கு கற்பூரம் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இவை முடி உதிர்தலைக் குறைத்து முடியை பலப்படுத்துவதுடன், முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது

தலை பேன் நீங்க

கற்பூரத்தின் சக்தி வாய்ந்த நறுமணம் தலை பேன் சிகிச்சைக்கு மிகுந்த நன்மை பயக்கும். கற்பூரம் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்தக் கலவையானது முடி பேன்களைக் கட்டுப்படுத்த மிகவும் நல்லதாகும்

முடி வளர்ச்சிக்கு

இந்தக் கலவையைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வேர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

முன்கூட்டியே நரைத்தல்

கற்பூரத்தின் ஊட்டமளிக்கும் கலவைகள் முடியின் மயிர்க்கால்களில் அவற்றின் நிறமியைத் தக்கவைக்க உதவுகிறது. இது முன்கூட்டிய முடி நரைப்பதை மெதுவாக்குகிறது