குளிர்காலத்தில் தலைமுடிக்கு கற்றாழை தடவுவது நல்லதா?

By Gowthami Subramani
11 Dec 2024, 13:22 IST

கற்றாழை மிகவும் குளிர்ச்சி மிக்கதாகும். எனினும், குளிர்காலத்தில் இதை முடிக்கு தடவலாமா என்பது குறித்து சந்தேகம் எழும். இதில் குளிர்ந்த காலநிலையில் முடிக்கு கற்றாழை தடவுவது நல்லதா என்பதைக் காணலாம்

நீரேற்றமிக்க

முடிக்குக் கற்றாழையைப் பயன்படுத்துவது முடியை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைவதால் முடிக்கு நீரேற்றத்தை அளிக்க கற்றாழையைப் பயன்படுத்தலாம்

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு

கற்றாழையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையை ஊட்டமளித்து ஆற்ற உதவுகிறது. இது அரிப்பு, சிவத்தலைப் போக்கவும், பூஞ்சை தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது

முடி வலிமைக்கு

தலைமுடிக்கு கற்றாழையைப் பயன்படுத்துவது, அதன் இழைகளை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் தடுக்கிறது

மென்மையான கூந்தலுக்கு

குளிர்காலத்தில் தலைமுடிக்கு கற்றாழையைப் பயன்படுத்துவது முடியை மென்மையாகவும் பட்டு போலவும் மாற்றுகிறது

எப்படி பயன்படுத்தலாம்

புதிய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அதை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்து, சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். பிறகு லேசான, சல்பேட் இல்லாத ஷாம்பூவைக் கொண்டு கழுவலாம்

எத்தனை முறை

குளிர்காலத்தில் தலைமுடிக்குக் கற்றாழையப் பயன்படுத்த விரும்புபவர்கள் சிறந்த முடிவுகளைப் பெற வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்

குறிப்பு

குளிர்ந்த காலநிலையில் கற்றாழையை நீண்ட நேரத்திற்குத் தலையில் தடவி வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக, வேறு சில உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது