தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதில் முடிக்கு பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளைக் காணலாம்
ஊட்டமளிக்கும் கூந்தலுக்கு
பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ ஒரு இயற்கையான ஆக்ஸிஜனேற்றமாகும். இது முடிக்கு ஊட்டமளித்து முடியை சேதத்திலிருந்து பாதுகாப்பதுடன், நன்றாக வளர உதவுகிறது
முடி வளர்ச்சிக்கு
பாதாம் எண்ணெயை உச்சந்தலையிலும் முடியிலும் மசாஜ் செய்வது முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து, வலுப்படுத்த உதவுகிறது
முடி பிளவு தவிர்க்க
பாதாம் எண்ணெய் முடியை வலுவாக்கவும், பிளவுபடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இவை சேதமடைந்த முடியால் முடி வளர்ச்சி குறைவதைத் தடுக்க உதவுகிறது
கெரட்டின் உற்பத்திக்கு
இந்த எண்ணெயில் உள்ள பயோட்டின் கெரட்டின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது அடர்த்தியான முடிக்கு வழிவகுப்பதுடன் செயலற்ற மயிர்க்கால்களை மீண்டும் செயல்படுத்துகிறது
பொடுகு குறைய
பாதாம் எண்ணெய் ஹைப்போஅலர்ஜெனிக் ஆகும். இவை வீக்கம் மற்றும் பாக்டீரியாவைக் குறைக்கிறது. மேலும் பொடுகுத் தொல்லையைத் தடுக்கக்கூடிய துளைகளை அடைக்கும் இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது