வெங்காயத்தில் ஃபோலிக் அமிலம், சல்பர், துத்தநாகம், தாதுக்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
உச்சந்தலை நன்மைக்கு
வெங்காயச் சாற்றில் உள்ள பண்புகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக மற்றும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது
முடி உதிர்தலுக்கு
வெங்காயத்தில் உள்ள டயட்டரி சல்பர் தலைமுடியை வலிமையாக்க உதவும் புரதமாகும். இதை உணவில் சேர்த்துக் கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது
எப்படி பயன்படுத்துவது
வெங்காய சாறு வாசனை பிடிக்காதவர்கள், வெங்காய சாறு கொண்ட இந்த கலவையை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது
தேங்காய் எண்ணெயுடன்
வெங்காயச் சாற்றில்தேங்காய் எண்ணெயை சம பாகங்களாக எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் மயிர்க்கால்கள் சரியாவதுடன், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க முடியும்
இஞ்சி வெங்காயச் சாறு மாஸ்க்
வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாற்றை சம அளவில் கலந்து, உச்சந்தலையில் தடவ வேண்டும். இந்த இரண்டு பொருள்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்வை எஹிர்த்துப் போராட உதவுகிறது
இந்த வழிகளில் வெங்காயச் சாற்றை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்வு போன்ற பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தலாம்