தலைமுடி ஆரோக்கியத்திற்கு வெங்காய சாறு பெரிதும் உதவியாக இருக்கும். வெங்காய சாற்றை தலைமுடிக்கு எப்படி அப்ளை செய்வது என பார்க்கலாம்.
வெங்காய சாறு எப்படி தயாரிப்பது?
வெங்காயத் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்யவும்.
இந்த பேஸ்ட்டை சுத்தமான காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து சாறு பெறலாம். பருத்தியின் உதவியுடன் இந்த சாற்றை உச்சந்தலையில் தடவவும்.
உலர்த்திய பின் தண்ணீரில் கழுவினால் போதும். மறுநாள் ஷாம்பூவால் தலையை அலசவும். வெங்காய சாறு சற்று வாசனையை ஏற்படுத்தக்கூடும்.
வெங்காய சாறு மற்றும் கற்றாழை
கற்றாழையை வெங்காய சாறுடன் கலந்து தடவினால் முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடி உதிர்தலையும் குறைக்கும். கற்றாழையில் பல அற்புதமான பண்புகள் உள்ளன.
வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்
வெங்காய சாற்றில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம். இது முடி உதிர்வு பிரச்சனையை குறைக்க உதவும்.
தலைமுடி ஆரோக்கியம்
வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் மிகவும் திறம்பட செயல்படுகிறது.