வெங்காயம் அல்லது பூண்டு
தலைமுடிக்கு வெங்காய எண்ணெய் பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் முடிக்கு பூண்டு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இவையிரண்டுமே முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்
கெட்டியான சாறு
வெங்காயம் மற்றும் பூண்டு சாற்றை நன்றாக வடிகட்டி, அதை கெட்டியான கலவையை உச்சந்தலையில் 15-20 நிமிடங்கள் தடவி வைத்து பிறகு கழுவி விடலாம்
பேஸ்ட்டாக
ஒரு சிறிய அளவு தண்ணீரில், வெங்காயம் மற்றும் பூண்டை ஒரு பேஸ்டாக பிசைந்து அதை ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தி 15-20 நிமிடங்கள் வைக்கலாம். இதை ஒரு பயனுள்ள ஷாம்பூவுடன் கழுவி விடலாம்
தேங்காய் எண்ணெயுடன்
வெங்காயம் மற்றும் பூண்டு சாற்றை தேங்காய் எண்ணெயுடன் முடியில் கலந்து, 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வினிகருடன் பயன்படுத்துதல்
வினிகர் முடி இழைகளை வலுப்படுத்தி, தலைமுடிக்கு பளபளப்பைக் கொடுப்பதால், வெங்காயம், பூண்டு மற்றும் வினிகர் சேர்த்து பயன்படுத்தலாம்
தோல்களை பயன்படுத்துதல்
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டின் தோலுரிப்புகளும் வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சி சுழற்சியை அதிகரிக்கிறது
எத்தனை முறை
சிறந்த முடிவுகளைப் பெற வாரத்திற்கு மூன்று முறையாவது பயன்படுத்த வேண்டும். இவை முடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியை மேம்படுத்தவும் உதவுகிறது