தலைமுடி கொட்டுகிறதா முருங்கை இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Karthick M
18 Sep 2024, 18:34 IST

முடி தொடர்பான பல பிரச்சனைக்கு முருங்கை சிறந்த தேர்வாகும். முருங்கை இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முருங்கையில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து, கரோட்டின், பயோட்டின், ஜிங்க், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளது.

முடி ஆரோக்கியத்திற்கு இரசாயனங்கள் கலந்த பொருட்களுக்கு பதிலாக இயற்கையான முருங்கை இலை பொடியை பேஸ்ட் செய்து தடவலாம்.

முருங்கை இலை, ஆம்லா இரண்டையும் பேஸ்ட் செய்து முடியில் தடவுவது. முடி உதிர்தல், அரிப்பு, பொடுகு போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

முருங்கை இலைகளில் பயோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது.