முருங்கை இலையை முடியில் இப்படி யூஸ் பண்ணுங்க.!

By Ishvarya Gurumurthy G
04 Jun 2024, 14:48 IST

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வழி தேடுகிறீர்களா.? அப்போ முருங்கை கீரையை இப்படி பயன்படுத்துங்க.. முடி போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வளரும்.!

சத்துக்கள் நிறைந்தது

வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ, வைட்டமின்-இ, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் முருங்கையில் இருப்பதால் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும், முடியை மிருதுவாக்கும்.

ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

முருங்கை ஹேர் மாஸ்க் செய்ய, 4 ஸ்பூன் முருங்கை இலை தூள், 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து தலையை அலசவும்.

முடி உதிர்வு தீரும்

முருங்கை ஹேர் மாஸ்க் முடி தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது. இதைத் தடவினால் முடி வலுப்பெறும்.

பொடுகு நீங்கும்

பொடுகை நீக்க முருங்கையை பயன்படுத்தலாம். முருங்கை உச்சந்தலையை நன்கு சுத்தம் செய்கிறது.

நரை முடி குறையும்

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தலைமுடி வேகமாக நரைத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், முடி நரைப்பதைத் தடுக்க முருங்கையைப் பயன்படுத்தலாம்.

வளர்ச்சியை அதிகரிக்கும்

முருங்கை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதனை தடவுவதால் கூந்தல் பளபளப்பாகும்.