கொய்யா இலைகள் கூந்தல் பராமரிப்பிற்கு மிகுந்த நன்மை தருகிறது. இதில் ஆரோக்கியமான கூந்தல் மேம்பாட்டிற்கு கொய்யா இலை எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்
முடி உதிர்வைக் குறைக்க
கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது மயிர்க்கால்களுக்கு சேதம் ஏற்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கிறது
மயிர்க்கால்களை வலுப்படுத்த
கொய்யா இலைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்கிறது. மேலும் இது வலுவான, அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
பொடுகு சிகிச்சைக்கு
கொய்யா இலைகளில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள், பொடுகு உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்றுவதுடன், உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு
கொய்யா இலைகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு
கொய்யா இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், உச்சந்தலையை ஆற்றவும், அமைதிப்படுத்தவும் உதவுகிறது. இது அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது
பிளவு முனைகளைத் தடுக்க
கொய்யா இலைச் சாற்றைத் தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்துவது முடியின் முனைகள் பிளவுபடுவதைத் தவிர்க்கவும், முடியை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது
கொய்யா இலை சாறு முடியை வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முடி உதிர்வைக் குறைத்து, ஒட்டுமொத்த முடியின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது
கொய்யா இலைகள் முடி ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. எனினும் தனிப்பட்ட ஆலோசனைக்கு சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது