எந்த செயற்கையான பொருட்களையும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில், உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால், இந்த டீ டிக்காஷனை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசலாம். நல்ல முன்னேற்றம் தெரியும்.
பொடுகை கட்டுப்படுத்தும்
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது முடிக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில், உள்ள காஃபின் மயிர்க்கால்களில் ஊடுருவி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதுடன் மற்றும் பொடுகு, பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
முதலில், 2 கப் கொதிக்கும் நீரில் இரண்டு கிரீன் டீ பைகளை போடவும். அதன் சாயம் முழுவதுமாக இறங்கும் வரை ஊற வைக்கவும். தண்ணீர் நன்கு ஆறியதும், அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலைமுடியில் ஸ்ப்ரே செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவவும்.
முடியின் நிறத்தை பராமரிக்க
உங்கள் தலைமுடியின் நிறத்தை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்பினால், கெமோமில் டீ-யை கொண்டு உங்கள் தலைமுடியை அலசவும். கெமோமில் தேநீரை அனைத்துவகையான முடிகளுக்கும் பயன்படுத்தலாம். இது குறிப்பாக செம்பட்டை முடிக்கு ஏற்றது.
எப்படி பயன்படுத்துவது
கெமோமில் தேயிலையை 2 கப் தண்ணீரில் சேர்த்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் நீர் ஆறியதும், இதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி முடியில் தெளிக்கவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முடியை கழுவவும்.
பிளாக் டீ
அதிகப்படியான முடி உதிர்வால் நீங்கள் அவதிப்பட்டால், பிளாக் டீ உங்களுக்கு கூடுதல் நன்மையை வழங்கும். முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) என்ற ஹார்மோன். பிளாக் டீயில் காஃபின் உள்ளது. இது DHT ஐ தடுக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
3 முதல் 4 பிளாக் டீ பைகளை 2 கப் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இப்போது தண்ணீரின் வெப்பம் குறையும் வரை காத்திருக்கவும். தண்ணீர் உலர்ந்ததும், அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.
பயன்பாட்டு முறை 2
இப்போது ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும். தேநீரை உங்கள் உச்சந்தலையில் ஸ்ப்ரே, உங்கள் தலைமுடி முழுவதையும் மசாஜ் செய்யவும். முடியை ஒரு பிளாஸ்டிக் தொப்பியால் மூடி 45 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இறுதியாக, குளிர்ந்த நீரில் முடியை அலசவும்.