வலுவான, ஆரோக்கியமான கூந்தலை யார் தான் விரும்ப மாட்டார்கள். நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவும் கிராம்பு நீர் எப்படி பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்
கிராம்பு நீர் தயாரிப்பு
1-2 தேக்கரண்டி அளவிலான கிராம்புகளை, 2 கப் அளவிலான தண்ணீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை ஆறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கலாம்
தலைமுடியில் பயன்படுத்துவது
தலைமுடியைக் கழுவிய பிறகு, முடி மற்றும் உச்சந்தலை மீது கிராம்பு தண்ணீரை தெளிக்கலாம் அல்லது ஊற்றலாம். பிறகு இதை மெதுவாக மசாஜ் செய்து 10-15 நிமிடங்கள் வைத்து வெற்று நீரில் கழுவிக் கொள்ளலாம்
எப்போது தடவலாம்?
கிராம்பு தண்ணீரை லீவ்-இன் சிகிச்சையாக பயன்படுத்தலாம். குளித்த பிறகு முடி மற்றும் உச்சந்தலை மீது சிறிது தெளிக்க வேண்டும். இதை இயற்கையாக உலர வைக்கலாம். இது முடியைப் பலப்படுத்தவும், பொடுகுத் தொல்லையைக் குறைக்கவும் உதவுகிறது
ஹேர் மாஸ்க்குகள்
கிராம்பு நீரை ஹேர் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம் அல்லது கிராம்பு நீரை கூடுதல் ஊட்டமளிக்கும் சிகிச்சைக்காக அலோ வேரா ஜெல்லுடன் கலக்க வேண்டும்
ஆரோக்கியமான கூந்தல்
கிராம்பு நீரை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம், முடியிலன் வலிமையில் முன்னேற்றம், பொடுகு குறைப்பது மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கிறது