ஆமணக்கு எண்ணெய் அதன் வளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அடர்த்தியான அமைப்புக்கு பெயர் பெற்றதாகும். இந்த எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடியை அடர்த்தியாக்கவும் உதவுகிறது. இதில் முடியை அடர்த்தியாக மற்றும் வலுவாக வைக்க ஆமணக்கு எண்ணெய் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
முடியை வலிமையாக்க
ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது முடியின் தண்டுகளுக்குள் ஆழமாக ஊடுருவி, அவற்றை உள்ளிருந்து வலுப்படுத்தி, முடி உடைவதைக் குறைக்க உதவுகிறது
முடியை அடர்த்தியாக்க
ஆமணக்கு எண்ணெய் முடியைச் சுற்றி, ஒரு பாதுகாப்புத் தடையை உருவாக்கி, அதை அடர்த்தியாக மாற்ற உதவுகிறது
பிளவு முனைகளை அகற்ற
ஆமணக்கு எண்ணெயை முடிக்குத் தொடர்ந்து பயன்படுத்துவது முடியை மென்மையாக்கவும், அதில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. மேலும், இது பிளவு முனைகள் ஏற்படுவதைக் குறைக்கிறது
முடியை பளபளப்பாக்க
முடிக்கு ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவதால், அது பளபளப்பாக இருக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், தலைமுடி மிகவும் கவர்ச்சிகரமானதாக மற்றும் அழகாக இருக்க வழிவகுக்கிறது
உச்சந்தலைக்கு ஊட்டமளிக்க
ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வேர்களுக்கு ஊட்டமளித்து, முடியை வலிமையாக்குகிறது. மேலும், இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
முடி உதிர்தலைக் குறைக்க
ஆமணக்கு எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடிய பொடுகு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெதுவெதுப்பான ஆமணக்கு எண்ணெயை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் மசாஜ் செய்வது, முடியை அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது