தலைமுடிக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவது முடி கருமையாக வளர்வதுடன், முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது
எந்தெந்த வழிகளில்
விளக்கெண்ணெயுடன் கூடுதலாக சில பொருள்களைச் சேர்த்து தலைக்கு பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
வேப்ப எண்ணெயுடன்
தலைமுடிக்கு விளக்கெண்ணெயுடன் வேப்ப எண்ணெயைக் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயின் மருத்துவ பண்புகள் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
தேங்காய் எண்ணெயுடன்
தேங்காய் எண்ணெயில் விளக்கெண்ணெயைக் கலந்து தலைமுடிக்குத் தடவலாம். இதற்கு தேங்கய் எண்ணெயை லேசாக சூடாக்கி, விளக்கெண்ணெயைக் கலந்து முடயில் மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து முடியை அலசலாம்
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பாதாம் எண்ணெயுடன் விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம்
கிளிசரின்
விளக்கெண்ணெயை கிளிசரின் உடன் சேர்ந்து பயன்படுத்தலாம். இவை இரண்டும் கெட்டித் தன்மை என்பதால் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடிக்குத் தடவலாம்
குறிப்பு
விளக்கெண்ணெய் உடன் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. எனினும், ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன்னதாக நிபுணரின் ஆலோசனை பெறலாம்