ஒரே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் எண்ணெய்!

By Devaki Jeganathan
16 Jan 2024, 17:31 IST

தவறான உணவுப்பழக்கம் மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக, முடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், நீங்கள் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால், சுரைக்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

சத்துக்கள் நிறைந்தது

சோடியம், இரும்பு, வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் சுரைக்காய் எண்ணெயில் காணப்படுகின்றன. அவை முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

முடி உதிர்வை குறைக்கும்

முடி உதிர்வை குறைத்து, நீளமான கூந்தலை பெற விரும்பினால் சுரைக்காய் எண்ணெய் தடவவும். இதில் உள்ள சத்துக்கள் முடி கொட்டுவதை தடுக்கிறது. இது முடியை பலப்படுத்துகிறது.

நரை முடியை போக்கும்

இளைஞர்களிடையே நரை முடி பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. நீங்களும் வெள்ளை முடியில் இருந்து விடுபட விரும்பினால், உங்கள் தலைமுடிக்கு சுரைக்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும்.

பொடுகு பிரச்சனை

குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனை கணிசமாக அதிகரிக்கிறது. இந்நிலையில், இந்த சிக்கலை சமாளிக்க சுரைக்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இது முடியில் உள்ள பொடுகை நீக்குகிறது.

முடியை பலப்படுத்தும்

உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் மாற்ற சுரைக்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இதில், உள்ள சத்துக்கள் முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

முடி வறட்சி நீங்கும்

உங்கள் கூந்தல் மிகவும் வறண்டிருந்தால், சுரைக்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு, ஷாம்பு கொண்டு முடியைக் கழுவவும். இது வறண்ட முடி பிரச்சனையை தீர்க்கும்.

சுரைக்காய் எண்ணெய் செய்முறை

சுரைக்காய் எண்ணெயை தயாரிக்க, சுரைக்காய் அதன் தோலுடன் சேர்த்து வெட்டவும். பின், இந்த தோல்களை 5 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்கவும். இப்போது ஒரு கடாயை எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் சுரைக்காய் தோல்களை சேர்த்து 15 நிமிடம் வதக்கவும். இதற்குப் பிறகு, அடுப்பை அணைத்து, குளிர்விக்கவும்.