பொடுகை போக்க ஆப்பிள் சிடர் வினிகரை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Karthick M
15 Apr 2025, 20:47 IST

பல்வேறு காரணங்களால் முடி தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. இதில் பிரதான பிரச்சனையான பொடுகு தொல்லைக்கு ஆப்பிள் சிடர் வினிகரை எப்படி யூஸ் செய்வது என பார்க்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் ஸ்ப்ரேயை உருவாக்க ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் ஒரு கப் தண்ணீரை சம அளவில் கலந்து ஸ்ப்ரே திரவத்தை தயார் செய்யவும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும், பின்னர் ஷாம்பு செய்த பிறகு உங்கள் உச்சந்தலையில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு, இறுதியாக சாதாரண நீரில் கழுவவும்.

ஆப்பிள் சிடர் வினிகர் ஸ்ப்ரேயை உச்சந்தலையில் மற்றும் முடிக்கு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.

ஆப்பிள் சிடர் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது உச்சந்தலையில் வளரும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.

இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சனையை கணிசமாக குறைக்கலாம்.