முடி ஸ்ட்ராங்கா வளரணுமா? ஆம்லாவை இப்படி யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
30 Dec 2024, 07:57 IST

முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும் ஒரு சிறந்த மற்றும் இயற்கையான தீர்வாக நெல்லிக்காய் அமைகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு ஆம்லாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்

ஆம்லா சாறு

தலைமுடியை ஆழமாக உள்ளே இருந்து வலிமைப்படுத்த புதிய நெல்லிக்காய் சாற்றை தினமும் குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி, முடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது

ஆம்லா ஹேர் ஆயில்

ஆம்லா எண்ணெயை சூடாக்கி, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வேர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும், இது முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதை ஓரிரவு அல்லது குறைந்தது ஒரு மணி நேரம் விட்டு, பிறகு கழுவி விடலாம்

ஆம்லா பவுடர்

நெல்லிக்காய் பொடியை சீகைக்காய் மற்றும் ரீத்தா பொடியுடன் கூந்தலுக்குப் பயன்படுத்தலாம். இது இயற்கையாகவே கூந்தலை சுத்தப்படுத்த உதவுகிறது. தலைமுடியைக் கழுவ இதைப் பயன்படுத்துவது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் உதவுகிறது

ஆம்லா, தேங்காய் எண்ணெய்

காய்ந்த நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் சேர்த்து, அது கருப்பாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின், இதை ஆறவைத்து வடிகட்டி பாட்டில் ஒன்றில் நிரப்பி பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வதை குறைக்கவும் உதவுகிறது

ஆம்லா ஹேர் மாஸ்க்

நெல்லிக்காய் பொடியை தண்ணீர், தயிர், அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்கள் வைத்து, பிறகு கழுவி விடலாம். இது பொடுகுத் தொல்லையைக் குறைத்து, கூந்தலுக்குப் பொலிவைத் தருகிறது