நரை முடி பிரச்சனையை தீர்க்க டை உதவுகிறது என்றாலும் இதில் உள்ள பக்க விளைவுகள் என்ன என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
டையில் இருக்கக்கூடிய இரசாயனங்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஒருவர் டை அடித்த 48 மணி நேரத்திற்குள் இதற்கான அறிகுறிகள் வெளிப்படலாம்.
அரிதாக உடலில் சிவப்பு தடுப்புகள், கழுத்து பகுதி மற்றும் உச்சந்தலையில் நமைச்சல், முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொப்பளம், வீக்கம், கட்டி போன்றவை ஏற்படும்.
பொதுவாக டை அடித்த பின் தலையை ஷாம்பூ கொண்டு அலசும் போதே சின்ன அலர்ஜிகள் தீரும். மாய்ஸ்சரைசர் மற்றும் கிரீம் தடவுவதன் மூலம் சரும அலர்ஜிகள் நீக்கலாம்.
இந்த பிரச்சனைகளை தீர்க்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை முறையாக முடிக்கு அப்ளை செய்யவும்.
டை அடிக்கும் போது அதன் தன்மையை அறிந்திருக்க வேண்டியது அவசியம். தேவை இருக்கும் பட்சத்தில் தங்கள் நலனுக்கேற்ப டை தேர்வு செய்து அப்ளை செய்யுங்கள்.