சூரிய ஒளியிடம் இருந்து கூந்தலை பாதுகாக்க சூப்பரான 7 டிப்ஸ்..!
By Kanimozhi Pannerselvam
17 Feb 2025, 08:34 IST
ஸ்கார்ப், தொப்பி நேரடி சூரிய ஒளியிலிருந்து கூந்தலை பாதுகாக்க ஸ்கார்ஃப் அல்லது பெரிய தொப்பி அணியலாம். பரபரப்பான நகரங்களில் இதுவே சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.
UV பாதுகாப்பு கொண்ட ஹேர் ஸ்பிரே, சீரம் சூரிய ஒளியிலிருந்து கூந்தலை பாதுகாக்க UV பாதுகாப்பு கொண்ட ஹேர் ஸ்பிரே, லீவ்-இன் கண்டிஷனர், அல்லது சீரம் பயன்படுத்தலாம். இயற்கையான பாதுகாப்புக்கு அலோவேரா ஜெல் அல்லது அரகான் ஆயில் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய் பெஸ்ட் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சூரிய ஒளியின் பாதிப்பை குறைக்கும். எண்ணெய் கூந்தலை உறையச்செய்து ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். வாரம் 2 முறை எண்ணெய் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்யலாம்.
ஹீட் ஸ்டைலிங்கை குறைக்கவும் ஸ்டிரெயிட்டனிங், கர்ளிங், ஹேர் கலரிங் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால் கூந்தல் அதிகமாக சேதமடையும். அதிக வெப்பத்தால் கூந்தல் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஹீட்-ப்ரொடெக்ஷன் ஸ்பிரே பயன்படுத்தலாம்.
ஷாம்பூ பயன்பாட்டை குறைக்கவும் தினமும் ஷாம்பூ பயன்படுத்தும் போது கூந்தலில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீங்கிவிடும். வாரம் 2 அல்லது 3 முறை மட்டும் ஷாம்பூ பயன்படுத்துவது சிறந்தது.
அதிகமாக நீர் குடிக்கவும் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கூந்தல் உலர்ந்து முறிவாகும். தினமும் 8-10 கப் நீர் குடிக்கவும்.
இயற்கை ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும் முருங்கை பூ, அலோவேரா, தயிர், வாழைப்பழம், தேங்காய் பால் போன்ற இயற்கை பொருட்களை வாரம் ஒருமுறை கூந்தல் பேக் ஆக பயன்படுத்தலாம். இது கூந்தலுக்கு ஈரப்பதம் சேர்க்கும் மற்றும் சூரிய ஒளி பாதிப்பை குறைக்கும்.