கோடைகால வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக முடி சேதமடைவதுடன், முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம். கோடையில் முடி உதிர்வைத் தடுக்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்
சூடான எண்ணெய் மசாஜ்
உச்சந்தலையில் சிறிது வெதுவெதுப்பான எண்ணெயைத் தடவி மசாஜ் செய்வது சீரான இரத்த ஓட்டத்தைத் தூண்டி, மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது
பூசணிவிதை பயன்பாடு
முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்ய பூசணி விதையை பயன்படுத்தலாம். இதற்கு காய்ந்த பூசணி விதையை நன்கு அரைத்து பொடியாக்கி அதில் தயிர் சேர்த்து கலவையை முடியில் தடவி பின்பு அலசலாம்
கண்டிஷனிங் பயன்பாடு
டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்குகள் முடி இழைகளுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. மேலும் இது முடியை நீரேற்றமாக வைப்பதுடன் முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது
வெப்பமூட்டுவதைத் தவிர்ப்பது
கோடையில் வெப்பமூட்டும் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இந்த வெப்பத்தின் வெளிப்பாடு தலைமுடியை உடையக்கூடியதாக மாற்றுகிறது
வெளியில் செல்லும் போது
சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் முடியை சேதப்படுத்தி வலுவிழக்கச் செய்கிறது. எனவே வெளியில் செல்லும் போது தலைமுடியை துணி அல்லது தொப்பியால் பாதுகாப்பது அவசியமாகும்
அலோவேரா ஜெல்
முடிக்கு அலோவேரா ஜெல் பயன்பாடு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் முடியின் இழைகளை வலுப்படுத்துகிறது
முறையான உணவு
கோடை காலத்தில் துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்