முடியை அழுகுப்படுத்துவது, ஷேவிங், ட்ரிமிங் என பல விஷயங்களுக்கு ஆண்கள் சலூனை நாடுகிறார்கள். சலூன் செல்லும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
கத்திரிக்கோல்
பலருக்கும் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோல் ஒருவருக்கு வெட்டப்பட்ட உடன் முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஷேவிங் பிளேடு
ட்ரிம்மன், பிளேடு பயன்படுத்தப்பட்டாலும் ஷேப் செய்வதற்கு பிளேடு முக்கியம். இந்த பிளேடு உங்களுக்கு பயன்படுத்தும் போது புதிதாக மாற்றப்படுகிறதா என்பத கவனிக்கனும்.
துண்டு
ஷேவிங் செய்தவுடன் சருமம் மிருதுவாக இருக்கும். ஒரே துண்டை பலருக்கு பயன்படுத்தும் போது சரும பிரச்சனை பரவ வாய்ப்பிருக்கிறது. நீங்களே ஒரு துண்டு எடுத்துச் செல்வது நல்லது.
ஹீட்டர்
ஹீட்டர் அதிக நேரம் பயன்படுத்தும் பட்சத்தில் முடி கொட்ட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஹீட்டர் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
ஹேர் டை
என்ன ரக தலைமுடி மை, அதில் எவ்வளவு அமோனியா உள்ளது. இதனால் முடிக்கு ஏதும் ஆபத்து வருமா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.