முடி வேர் ஸ்ட்ராங்கா வலுப்பெற இத ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
11 Jul 2024, 09:00 IST

பலவீனமான முடியின் வேர்களால் முடி உதிர்வு, அடர்த்தி குறைதல் மற்றும் இன்னும் பிற முடி பிரச்சனைகள் ஏற்படலாம். முடி வேர்களை வலுவாக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் உதவும் இயற்கை வைத்தியங்களைக் காணலாம்

உச்சந்தலையில் மசாஜ்

வழக்கமாக உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. உச்சந்தலையில் மெதுவாக விரல் நுனியைப் பயன்படுத்தி வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யலாம்

ஆரோக்கியமான உணவு

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் போன்ற சமச்சீரான உணவுகள் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனவே தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்க்கலாம்

அதிக புரதம்

முடி வளர்ச்சிக்கு அதிக புரதம் தேவைப்படுகிறது. உணவில் புரதத்தை சேர்ப்பது முடி வளர்ச்சி மற்றும் வலிமையை ஆதரிக்கிறது. அதன் படி முட்டை, பால் பொருள்கள், பருப்பு வகைகள் மற்றும் மெல்லிய இறைச்சிகள் போன்றவற்றைச் சேர்க்கலாம்

கற்றாழை

கற்றாழையில் நிறைந்துள்ள பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவி, 30 நிமிடம் வைத்து பின் கழுவலாம்

சல்பேட் இல்லாத பொருள்

சல்பேட்டுகளைப் பயன்படுத்துவது முடியின் இயற்கையான எண்ணெய்களை அகற்றி வேர்களை வலுவிழக்கச் செய்கிறது. இதற்கு சல்பேட் இல்லாத ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தலாம்

முட்டை மாஸ்க்

முட்டையில் புரோட்டீன்கள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியை வலுவாக்க உதவுகிறது. உச்சந்தலை மற்றும் முடிக்கு முட்டை மாஸ்க் பயன்படுத்தி 20 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவி விடலாம்

வெப்பத்தைத் தவிர்த்தல்

முடிக்கு ஸ்டைலிங் கருவியைப் பயன்படுத்துவது அதன் வேர்களைப் பலவீனப்படுத்தலாம். ஸ்டைலிங் செய்வதற்கு முன் வெப்பத்தைக் குறைப்பது அல்லது வெப்ப பாதுகாப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம்