பொசுபொசுனு, மென்மையா முடி வளர முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
07 Jan 2025, 17:40 IST

முட்டைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக மட்டுமல்லாமல், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது

முட்டை ஹேர் மாஸ்க்

முட்டையை அடித்து முடிக்கு மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மேலும், முட்டையில் உள்ள புரதம் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

முட்டை, தயிர் ஹேர் மாஸ்க்

உச்சந்தலையின் pH ஐ சமன் செய்வதற்கு தயிர் உதவுகிறது. அதன் படி, இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு முட்டையைக் கலந்து, 30 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவலாம். இந்த ஹேர் மாஸ்க் முடியைப் பலப்படுத்தவும், வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது

முட்டை, எலுமிச்சை ஹேர் மாஸ்க்

உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்த எலுமிச்சை உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சைச் சாறு கலந்து முடியில் தடவி, 20-30 நிமிடங்கள் வைத்து கழுவலாம். இது உச்சந்தலையைத் தூண்டவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

தேன், முட்டை ஹேர் மாஸ்க்

முடிக்கு ஈரப்பதத்தைத் தக்க வைக்க தேன் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு முட்டையை ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் கலந்து தலைமுடிக்கு தடவ வேண்டும். இதை 20-30 நிமிடங்கள் வைத்து, பிறகு கழுவலாம். இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைப்பதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

முட்டை, கற்றாழை ஹேர் மாஸ்க்

அலோவேரா உச்சந்தலையை ஆற்றவும் மற்றும் எரிச்சலை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு ஒரு முட்டையை இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து, 20 நிமிடங்கள் தடவி பின் கழுவலாம். இது உச்சந்தலையில் ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது