கோடை காலத்தில் முடியை பாதுகாப்பது கடினமான ஒன்று. கோடையில் முடி ஆரோக்கியமாக இருக்க இந்த பதிவில் உள்ள ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.
தேங்காய் பால் ஹேர் மாஸ்க்
தேங்காய் பாலில் வைட்டமின் பி, சி, மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக இருப்பதுடன், தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரோட்டீனை வழங்குகிறது.
தயிர், தேன், எலுமிச்சை ஹேர் மாஸ்க்
எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்க உதவுகிறது. மேலும் தேன் முடிக்கு ஊட்டமளிப்பதுடன், தயிர் முடிக்குத் தேவையான புரோட்டீன்களைக் கொடுக்கிறது. இவை மூன்றையும் கலந்து பயன்படுத்துவது முடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்கிறது.
நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
நெல்லிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக்குகிறது.
கற்றாழை, ஆலிவ் ஹேர் மாஸ்க்
கற்றாழை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதுடன், வறட்சியைத் தடுத்து தலைமுடியை மென்மையாக மாற்றுகிறது. சிறிது ஆலிவ் ஆயிலை சூடாக்கி, அதில் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்த கலவையை தலையில் தடவி சிறிது மசாஜ் செய்யலாம்.
வெங்காயம் ஹேர் மாஸ்க்
வெங்காய சாறு தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சாற்றினை முடியில் தடவி வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.