தலைமுடி கருகருன்னு வளர... கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Kanimozhi Pannerselvam
22 Oct 2024, 08:35 IST

பொதுவாக எல்லா பெண்களும் தங்கள் தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பலர் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக 20-25 வயதிற்குட்பட்ட பெண்களிடையே இந்த பிரச்சனை அதிகமுள்ளது.

முடி உதிர்வுக்கு காரணம் என்ன?

முடி உதிர்வுக்கான முக்கியக் காரணம் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் நொறுக்குத் தீனிகளாக இருக்கலாம். பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக முடியைப் பராமரிக்க நேரமில்லாததும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க காரணமாகிறது.

ஹேர் ஆயில் மசாஜ்

டைம் அறிக்கையின்படி, ஹேர் ஆயில் மசாஜ் முடி பிரச்சனைகளை குணப்படுத்தும். எண்ணெய் மசாஜ் பொடுகு மற்றும் வறண்ட முடி பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இது முடி உதிர்தல் பிரச்சனையை குறைப்பது மட்டுமின்றி உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் மாற்றுகிறது.

தேவையானவை

கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதி - 1 கப், தேங்காய் எண்ணெய் - 1 கப். இதற்கு மாற்றாக கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்

முடி ஆரோக்கியம் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை நல்லது. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது. கூந்தலுக்குப் பொலிவைத் தருகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடியை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் உடைவதைக் குறைக்கிறது. தேங்காய் எண்ணெயில் பல்வேறு கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை முடியை வலுப்படுத்தி பாதுகாக்கின்றன.

தயாரிப்பது எப்படி?

ஒரு இரும்புக் கடாயில் சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் செடியில் இருந்து எடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லைக் கலந்து கொதிக்க வைக்கவும். ப்போது தண்ணீர் அனைத்தும் ஆவியாகும் வரை எண்ணெயைக் கொதிக்க வைக்கவும். ஒரு நாள் பாத்திரத்தில் வைத்திருந்து மறுநாள் வடிகட்டினால் எண்ணெய் ரெடி.

எப்படி பயன்படுத்துவது?

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உச்சந்தலையில் தடவவும். நாள் முழுவதும் அப்படியே விடவும். ஒரு மணி நேரம் பரவாயில்லை. பின்னர் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து நீளமாக வளரும்.